தமிழ்நாடு இளம் கண்டுபிடிப்பாளர்களாக கலைமகள் பள்ளி மாணவர்கள் தேர்வு

தமிழக அரசின் தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் கண்டுபிடிப்பு நிறுவனம் நடத்திய தமிழ்நாடு இளம் கண்டுபிடிப்பாளர்களுக்கான தேடலில் செல்வம் கல்வி குழுமத்தின் கலைமகள் பள்ளி மாணவர்கள் சச்சின், ஞானஸ்ரீஹரன், தனஞ்செய் பெரியசாமி ஆகியோர் மண்டல அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அந்த மாணவர்களுக்கு செல்வம் கல்விக் குழுமத்தின் தாளாளர் மருத்துவர் பி. செல்வராஜ், செயலர் கவித்ரா நந்தினி பாபு, ஆராய்ச்சித் தலைவர் ஆர். சசிக்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகளும் பாராட்டுகளைத் தெரிவித்தனர்.